யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மூவர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
வெளியே செல்லும்போது முகக் கவசங்களை அணிவதை கடைப்பிடியுங்கள், தனிநபர் இடைவெளியை பேணுங்கள், சவர்க்காரமிட்டு கைகளை சுத்தமாக கழுவுங்கள், அநாவசியமாக கை குலுக்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், இயன்ற அளவு கூட்டமாக ஒன்று சேர்வதை தவிருங்கள்.
இதுபோன்ற செயற்பாடுகளில் தான் மீண்டும் ஒரு கொரோனா பேரலை ஏற்படாது தவிர்க்க முடியும். முன்பு போன்ற நிலை ஏற்படாது தவிர்க்க அனைவரும் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார். தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.