அர்க்டரஸ் அச்சுறுத்துகிறது: புதிய கொரோனா வேகமாக பரவுகிறது

0
156

கொரோனா வைரஸின் புதிய திரிபு உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக விரைவில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அர்க்டரஸ் எனப்படும் இந்தத் திரிபால், கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 11,109 புதிய கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த தொற்று இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் இனங்காணப்பட்டுள்ளது.

ஒமிக்ரோனின் துணைத்திரிபான XBB.1.16 இன்னும் வல்லுனர்களால் ஆராயப்பட்டு வருவதுடன் அதன் திரிபுகள் மேலும் கடுமையானவையாக இருக்குமென அவர்கள் எதிர்வு கூறியுள்ளனர். சிறுவர்களிடத்தில் வெண்படல அழற்சி உட்பட்ட புதிய அறிகுறிகளை அது உண்டாக்கும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here