நு/ கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும், தரம் 6 இற்கு மாணவர்களை உள்ளீர்த்தலும் அதிபர் எஸ். விஜயகுமார் தலைமையில் 21/04 நடைபெற்றது.
பெற்றோர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது 2022 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் லசந்த அபேவர்த்தன, வகுப்பறை அமைப்பதற்கு உதவி வழங்கும் தலவாக்கலை லிந்தலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக்க சேமபால , கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர். கணேசன் , ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
டி சந்ரு