பஞ்சாப் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவிய போதிலும் அந்த அணியின் தலைவர் ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை குவித்தது.
எனினும் கடின இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை சேர்த்து 13 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இந்தப்போட்டியில் ரோகித் சர்மா 3 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஐபிஎலில் 250 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.