உடல் சூட்டை தணிக்கும் சேப்பங்கிழங்கு

0
142

சேப்பைக்கிழங்கை சேமைக்கிழங்கு, சாமைக்கிழங்கு என்றும் கூறுவர். இந்த சேப்பைக்கிழங்கில் எண்ணற்ற சத்துக்களும் மருத்துவ குணங்களும் உள்ளது. இந்த கிழங்கினை நீரில் வேக வைத்து தோலை நீக்கிவிட்டு வறுவலாகவோ, சாம்பார் அல்லது மோர் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி என்ற உயிர்ச்சத்தும், இரும்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளன. வாய்வுத்தன்மை கொண்டதால், வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்த கிழங்கினை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. ஆரோக்கியமாக உள்ளவர்கள் கூட எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவது நல்லது.
சேப்பைக்கிழங்கை சேமைக்கிழங்கு, சாமைக்கிழங்கு என்றும் கூறுவர். இந்த சேப்பைக்கிழங்கில் எண்ணற்ற சத்துக்களும் மருத்துவ குணங்களும் உள்ளது.இந்த கிழங்கினை நீரில் வேக வைத்து தோலை நீக்கிவிட்டு வறுவலாகவோ, சாம்பார் அல்லது மோர் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி என்ற உயிர்ச்சத்தும், இரும்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளன.

வாய்வுத்தன்மை கொண்டதால், வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்த கிழங்கினை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் கூட எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவது நல்லது. அவ்வாறு சாப்பிடும் போது இதில் நான்கு பல் பூண்டினை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லைக்கு உள்ளாக நேரிடும். அஜீரணக்கோளாறு ஏற்படும்.

இது உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இதற்கு நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் ஆற்றல் உள்ளது.

இக்கிழங்கை அரைத்து கட்டிகளுக்கும், புண்களுக்கும் மருந்தாக வைத்துக் கட்டலாம். கட்டிகள் பழுத்து உடையும். புண்கள் சீக்கிரம் ஆறிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here