இலங்கையில் மனநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

0
140

இலங்கையில் மனநோய்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சிறப்பு மனநல மருத் சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான டபிள்யூ.ஏ.எல். விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இலங்கையில் மனநோயாளிகள் வேகமாக அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்தும் சிறப்பு ஆய்வு நடத்தினோம்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியே இதற்கு முக்கிய காரணம் என்பது எமக்கு தெளிவாகியது.

இது மிகவும் பிரச்சனைக்குரிய நிலையாகும். ஒரு நாட்டில் முடிவெடுக்கும் நபர்கள் சரியான மன ஒருமைப்பாடு இல்லாமல் செயல்படும்போது, நாடும் மக்களும் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். மன நெருக்கடிகள் அதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

நாட்டை ஆளும் மக்கள் எவ்வாறு மன ஒருமைப்பாடு இல்லாமல் செயற்படுகிறார்கள் என்பதற்கு இலங்கை அரசியலில் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

தாங்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பலருக்குத் தெரியாது. நம் நாட்டு அரசியலில் இப்படிப்பட்டவர்கள் ஏராளம்.

முறையான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் குழப்பமான மனதைத் தெளிவுபடுத்தலாம். தேவையான ஆலோசனைகளை முறையாகப் பெறுவது மிகவும் முக்கியம் என்றும் மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here