தடை செய்யப்பட்ட பேஸ்புக், டுவிட்டர்

0
192

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பேஸ்புக், டுவிட்டர் கடந்த 9 இம்ரான் கான் கைது செய்ததை அடுத்து ஏற்பட்ட போராட்டங்களை அடுத்து இந்த தடை போடப்பட்டது ஆனால் இன்று வரை அத் தடை நீக்கப்படவில்லை.

முன்னாள் பிரதமர் இம்ரான்கானை அந்த நாட்டின் பல வழக்கில் பதிவாகி துணை ராணுவத்தினர் மூலம் அதிரடியாக கைது செய்தனர். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

மேலும் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அவற்றுக்கான தடை தொடருவதாக தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here