அன்பார்ந்த பெற்றோர்களே………
இப்போது நாடு முழுவதும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பல்வேறு குற்றச் செயல்கள் நடத்தப்படுவதாய் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றது.அத்தோடு இளம் யுவதி குறிப்பாக பெண்கள்.
அன்பின் பெற்றோர்களே உங்கள் பிள்ளை மேல் நலனும் அக்கறையும் செலுத்த உங்களால் மாத்திரமே முடியும்.உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை நீங்கள் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள் இதனால் ஆபத்துக்களில் இருந்து உங்கள் பிள்ளையை உங்களால் பாதுகாக்க முடியும்.
தாய் /தந்தை இல்லாமல் வேறு எந்த ஒரு மூன்றாம் நபர்களுடனும் உங்கள் பிள்ளையை வெளியில் அனுப்ப வேண்டாம். பாடசாலை/பிரத்தியேக வகுப்புக்கள் செல்லும் உங்கள் பிள்ளைகளை மிகக் கவனமாக சென்று வர சொல்லுங்கள். வெளியில் நடமாடும் மூன்றாம் மனிதர்கள் அன்பளிப்பாய் வழங்கும் எந்த இனிப்பு / பானம் எதையும் அருந்தவோ உண்ணவோ வேண்டாம் என்று கண்டிப்புடன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
இந்த விலாசம் பற்றித் தெரியுமா இந்த வீட்டை அடையாளம் காட்ட முடியுமா இந்த நபரை எங்கேனும் கண்டு இருக்கின்றீர்களா போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ மூன்றாம் மனிதர் ஒருவர் பேச்சுக்கு பதில் அளிக்கவோ வேண்டாம் என தெளிவாய் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
பாடசாலை செல்லும் உங்கள் பிள்ளைகளிடம் இப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் கூச்சல் இட்டு அருகில் இருப்பவரை உதவிக்கு அழைக்க சொல்லிக் கொடுங்கள். நண்பர்கள் /நண்பிகள் வீடுகளுக்கு செல்வதை கூடுமானவரை தவிருங்கள் இயன்றவரை தனியாய் பயணம் செய்வதை முற்றாய் தவிர்ந்து கொள்ளுங்கள்..
கையடக்க தொலைபேசிகளை கவனமாக பயன்படுத்த கற்றுக் கொடுங்கள் அதிக நேரம் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்
பாடசாலை விட்டு திரும்பும் போது மிக கவனமாக வருமா று கூறுங்கள். பிரத்தியே வகுப்புகள் முடிய அதிக நேரம் எடுத்தால் சென்று கூட்டி வாருங்கள்
உங்கள் பிள்ளையின் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்துங்கள்
உங்கள் பிள்ளையின் வகுப்பு ஆசிரியருடன் அடிக்கடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
அதிபர்
கேம்பிரிட்ஜ் கல்லூரி ஹட்டன்.
நிருபர்.செ.தி.பெருமாள்.