கடந்தகாலங்களின் காயங்களை எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளாக மாற்ற முடியும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியரே பொய்லிவ்வேர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யவேண்டும், அதன் மூலம் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் குறித்து பதிலளிக்கும் நிலையை ஏற்படுத்தலாம் என குறித்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை நாங்கள் கௌரவிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்தகாலங்களின் காயங்களை எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளாக மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்ப்பதில் உலகிற்கு தலைமைதாங்கிய கனடாவின் முன்னையை கென்சவேர்ட்டிவ் அரசாங்கங்களை தற்போதைய அரசாங்கம் பின்பற்றவேண்டும், ராஜபக்ச அரசாங்கம் இழைத்த இனப்படுகொலை மற்றும் ஏனைய கண்டித்தக்க குற்றங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து 2013 இல் பொதுநலவாய உச்சிமாநாட்டை கனடா புறக்கணித்தது,ஏனைய நாடுகளும் இதனை பின்பற்றி ராஜபக்ச ஆட்சியாளர்களை புறக்கணிக்கும் நிலையை ஏற்படுத்தியது உலகம் தமிழ் மக்களிற்கு ஆதரவாக நின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யவேண்டும் என்ற இலங்கையின் மனித உரிமை பரப்புரையாளர்களின் வேண்டுகோள்களுடன் நாங்கள் இணைந்துகொள்கின்றோம் இதன் மூலம் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் குறித்து பதிலளிக்க முடியும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியரே பொய்லிவ்வேர தெரிவித்துள்ளார்.