ஜப்பானில் திறந்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை

0
152

ஹிரோஷிமா நகருக்கு மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலை இந்திய அரசால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் சிலையை பிரதமர் மோடி நேற்று (20) திறந்து வைத்தார்.ஹிரோஷிமாவில் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின்போது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக ஹிரோஷிமா நகருக்கு மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலை இந்திய அரசால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

42 அங்குல உயரமுள்ள வெண்கல மார்பளவுச் சிலை ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வரும் அணுகுண்டு நினைவுச் சின்னம் கட்டிடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here