கல்வியில் ஏற்படும் பிரச்சினைகளை நாளுக்கு நாள் மூடி மறைத்துவிட முடியாது_ பி.ஸ்ரீதரன் தெரிவிப்பு

0
158

கல்வித்துறையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு சிக்கல்கள் நாளுக்கு நாள் பிள்ளைகளும் ஆசிரியர்களும் அதிபர்களும் பெற்றோர்களும் நாடளாவிய ரீதியிலும் உலகலாவிய ரீதியிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது நாம் அறிந்த விடயமே. இவ்வாறான பிரச்சினைகளை மூடி மூடி எமது உள்ளத்தில் வைத்திருக்க முடியாது. அவற்றிக்குரிய சரியான தீர்வினை இடத்தினை தெரிவு செய்ய வேண்டிய காலம் அமைந்துள்ளது. ஆகவே எதிர்கால சமூகத்தில் மாணவர்கள் என்பவர்கள் இருக்க வேண்டிய முக்கியமானவர்கள். அவர்களது வாழ்க்கையோடு இணைந்து செயப்படுகின்ற இவ்வாறான மனித வளம். மிக பிரயோசனம் உள்ளதாக செயப்பட வேண்டும். அவ்வாறான செயப்பாட்டை நோக்கி நகர்த்தவே இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இன்றைய கடினமாக சூழ்நிலையில் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளல் எனும் தொனிப்பொருளில் பொகவந்தலா ஜூம்மா பள்ளிவாசல், மற்றும் இஸ்லாமிய இளைஞர் மன்றம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள், அதிபர்கள் பெற்றோர்களுக்கான விசேட செயலமர்வு இன்று (21) திகதி பொகவந்தலாவை தண்டாயுதபாணி மணி மண்டபத்தில் ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
இதன் போது முன்மாதிரி மிக்க மாணவ சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று காலை 8.மணி முதல் 10 மணிவரை நடைபெற்றது.

அதனை சமூக வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் போன்ற விடயங்கள் மிகத்தெளிவாகவும் பிரயோக ரீதியாகவும் இந்த செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டன.

சபீர் மொஹமட் ஹசீம் விரிவுரையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் இரண்டைச் சேர்ந்த தரம் 10 தொடக்கம் 13 வரை கல்வி பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் ,அதிபர்கள், வளவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பொகவந்தலா ஜூம்மா பள்ளிவாசல், மற்றும் இஸ்லாமிய இளைஞர் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டுக் குழு சார்பாக மன்சூர் ஹலி, ஏ.டப்ளியு.பசீர், சி.எம்,ராசிக், எம்.அக்ரம், மொஹட் ஹரூஸ், எஸ்.எச் யூரூஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here