ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்!

0
155

இந்தியாவின் ஜார்கண் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் அங்கிதா என்ற தாய்.

இப்படி ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பிறப்பது 6.5 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.இதில் சிறப்பு என்னவென்றால் அந்த 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த அங்கிதா என்ற பெண் அண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கருப்பையில் 5 குழந்தைகள் இருப்பது தெரிய வந்ததும் இது கடினமான பிரசவமாக இருக்கும் என்று மருத்துவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். காரணம் இப்படி பிறக்கும் குழந்தைகளில் பலர் இறந்து விடுவார்கள். மேலும், தாயின் உயிருக்கும் ஆபத்து என்பதால் மருத்துவர்கள் அந்த பெண்ணை எச்சரித்துள்ளனர்.

ஆனால், அந்த பெண் இந்த பிரசவத்தை செய்து கொள்ள விரும்பியுள்ளார். என்னதான் கடினமான பிரசவமாக இருந்தாலும் பெண்ணின் விருப்பத்தை மறுக்க முடியாத மருத்துவர்கள் துணிந்து அந்த பிரசவத்தை செய்துள்ளனர்.

இந்நிலையில் தாய் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் 7மாத குழந்தைகளாக 5 குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளன. குழந்தைகள் வழக்கத்தை விட சிறிது எடை குறைவாக இருப்பதால் NICUவில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here