100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று வியாழக்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.7 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் பாரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
முதலில் 3 மாடிகளில் மட்டும் தீப்பற்றியுள்ளதுடன் கட்டிடம் முழுவதும் பரவியதாக நேரில் பார்க்க மக்கள் தெரிவித்துள்ளனர்.தீ வேகமாக பரவியதால், அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் தீப்பரவியுள்ளது.
இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது.தீ விபத்தால், 7 மாடி கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் இடிந்து விழுந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் 20 இயந்திரங்களுடன் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்தவர்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.