சிறுவர்கள் கடத்தல் : பி ன்னணியில் நடப்பது என்ன?

0
145

இவ்வருடம் மார்ச் மாத இறுதியிலிருந்து மே மாதம் வரை சிறுவர் கடத்தல் சம்பவங்கள் பல இடம்பெற்றிருந்தாலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் எந்த தகவல்களையும் பொலிஸார் வழங்கியிருக்கவில்லை.எனவே, இது மக்களை அச்சமுறச் செய்யும் ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாட்டில் ஏதாவது முக்கியமான அரசியல் நகர்வுகள் இடம்பெறும்போது மக்களை திசை திருப்புவதற்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது இலங்கையில் வழமையாகிப் போனது. இது குறித்து அரசாங்கமோ பொலிஸ் தரப்போ அலட்டிக்கொள்ளவில்லை.

அதிகரித்துள்ள சிறுவர் கடத்தல்களை தடுக்கும் நோக்கில் புதிய சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கூறினாலும், இதுவரை அப்படியானதொரு பிரிவு ஆரம்பிக்கப்படவில்லை என்பது முக்கிய விடயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here