ஒரு கிலோ கீரி சம்பா 270 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் நுகர்வோர் அதிகார சபைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.தெமட்டகொட பிரதேசத்தில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் கடையொன்றை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சோதனையிட்டு அடையாளம் கண்டுள்ளனர்.
அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 260 ரூபாவை விட 1 கிலோ கீரி சம்பாவின் விலை அதிகமாக இருப்பதாகவும், அந்த கடையில் ஒரு கிலோ கீரி சம்பா 270 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் நுகர்வோர் அதிகார சபைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அதிக விலைக்கு விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட 5 கிலோ சம்பா அரிசியின், கிட்டத்தட்ட 250 மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு, நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளின் மேற்பார்வையில் அந்த அரிசி மூட்டைகள் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிக விலைக்கு விற்பதாலும், இருப்பு மறைப்பதாலும் சந்தையில் கீரி சம்பா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் கடைகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு வருவதாகவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.