எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட டக்சி முச்சக்கரவண்டிகளுக்கான 22 லீற்றராகவும், மற்ற முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு 14 லீற்றராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும் கார் மற்றும் வேன்களுக்கான ஒதுக்கீடு 40 லீற்றராகவும், பேருந்து மற்றும் லொறிகளுக்கான ஒதுக்கீடு 125 லீற்றராகவும் அதிகரிக்கப்படும்