இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ள இலங்கை..!

0
151

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்தியாவின் பிரபல நடிகரான ரஜினிகாந்தின் உதவியை அந்நாடு நாடியுள்ளது.

இதன்படி, நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றுமுன்தினம் (29-05-2023) திங்கட்கிழமை நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் இடம்பெற்றதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் நேற்றைய தினம் (30) அறிவித்துள்ளது.

குறித்த சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான ராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் வெங்டேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here