களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவில் தீயில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழப்பு!

0
120

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடைய பூசாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here