கண்டி மாவட்ட தமிழ் மக்களின் பல தசாப்தகால அரசியல் அபிலாஷைகளை ஒருசில வருடங்களில் நிறைவேற்றியவர் வேலு குமார் எம்பி

0
172

“கண்டி மாவட்ட தமிழ் மக்களின் பல தசாப்தகால அரசியல் அபிலாஷைகளை ஒருசில வருடங்களில் நிறைவேற்றியவர் வேலு குமார் எம்பி” என பஹத ஹேவாஹெட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கணேசன் பெரியசாமி தெரிவித்தார்

மலையக அரசியல் தலைவர்களால் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டிருந்தனர். கிராம உத்தியோகத்தர் காரியாலயம் முதல் அணைத்து அரச நிர்வாக காரியாலங்களிலும் ஓரம்கட்டப்பட்டிருந்தனர். பிரச்சினை என வருகின்ற போது எமது மக்களுக்காக குரல் கொடுக்க எவரும் இருக்கவில்லை. கேட்ப்பாரற்ற நிலையே காணப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலேயே வேலு குமார் பாராளுமன்ற உறுப்பினராக கண்டி மாவட்டத்தில் தெரிவுசெய்ப்பட்டார். கண்டி மாவட்ட தமிழ் மக்களின் பல தசாப்தகால அரசியல் அபிலாஷைகளை ஒருசில வருடங்களில் நிறைவேற்றியும் காட்டினார்.

அன்று எமது மக்கள் அனைத்து அபிவிருத்தி திட்டங்களிலும் ஓரம்கட்டப்பட்டனர். அபிவிருத்திகள் கிராமத்திற்கும், நகரத்திற்கும் மட்டுப்படுத்தப்படிருந்தது. வீடுமைப்பு என்பது கனவாக காணப்பட்டது. சாதாரண நாளாந்த விடயங்களை செய்வதிலேயே பல கெடுபிடிகளை சந்திக்க நேரிட்டது. ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினரின் வருகைக்கு பின்னர் இவை முற்றாக மாற்றியமைக்கப்பட்டது. இதனை கண்டி மாவட்டம் முழுவதும் வாழும் எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

பல்லாயிரம் குடும்பங்களுக்கு தனி வீட்டுக்கான காணித்துண்டு வழங்கப்பட்டது. தனி வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. பல பாடசாலைகள் முற்று முழுதாக அபிவிருத்தி செய்யப்பட்டது. பாதைகள், பாலங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் என தொடர்ச்சியாக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அன்று கிராமத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தவைகள் பெருந்தோட்ட பகுதிகளுக்கும், எமது மக்கள் வாழும் பகுதிகளுக்கும் கொண்டுவரப்பட்டது. இவை அனைவரது மனங்களுக்கும் தெரிந்த உண்மையாகும்.

எமது பாராளுமன்ற உறுப்பினரின் அரசியல் கொள்கையை, அரசியல் செயற்பாடுகளை மற்றும் மக்கள் பணிகளை யார் வேண்டுமானாலும் விமர்சிக்க முடியும். ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லாம் அவரை பற்றி, அவரது வேலை திட்டங்களை பற்றி நல்லதை கூறுவதாகவே அமையும். எனவே காழ்ப்புணர்ச்சியோடு அவர் மீது சேறு பூசும் கருத்துக்களை முன்வைப்பதால் அவருடைய அரசியல் செயற்பாடுகளுக்கு எவ்வித களங்கமும் ஏற்படப்போவதில்லை. கண்டி மாவட்ட தமிழ் மக்கள் அன்றும், இன்றும், எதிர்காலத்திலும் அவரோடு கைக்கோர்த்து பயணிக்க தயாராகவே உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here