இன்டர் மிலானை வீழ்த்தி முதல்முறையாக சம்பியன்ஸ் லீக்கை வென்றது மென்செஸ்டர் சிட்டி

0
207

கடந்த பருவாக்கத்தில் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டியில் ரியல் மெட்ரிக் அணியிடம் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டது.
சாம்பியன் லீக் கால்பந்தாட்ட இறுதி போட்டியில் இன்டர் மிலானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மென்செஸ்டர் சிட்டி அணி முதன்முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நேற்றையதினம், இஸ்தான்புல்லில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன் லீக் கால்பந்தாட்ட இறுதி போட்டியில் இங்கிலாந்து கழகமான மென்செஸ்டர் சிட்டி அணியும் (Manchester City) இத்தாலியன் கழகமான இன்டெர் மிலன் அணியும் (Inter Milan) மோதின

கால்பந்தாட்ட சாம்பியன் லீக் இறுதி போட்டியில் மென்செஸ்டர் சிட்டியுடன் மோதும் இன்டெர் மிலன் ஐரோப்பிய கால்பந்தின் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் மென்செஸ்டர் சிட்டி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை

மென் செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மென் செஸ்டர் சிட்டி முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை

அதற்கமைய, இரண்டாவது பாதியின் 68வது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டி அணி வீரர் ரொட்றி (Rodri) அடித்த கோல் கோலின் மூலம் இன்டர் மிலானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மென்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கடந்த பருவகாலத்தில் மென் செஸ்டர் சிட்டி அணியானது FA கோப்பை மற்றும் ப்ரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது கடந்த சாம்பியன்ஸ் லீக் பருவகாலத்தில் அரையிறுதி போட்டியில் ரியல் மெட்ரிக் அணியிடம் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here