பேருந்து கட்டணங்களை 20% குறைக்க போக்குவரத்து அமைச்சு திட்டம்

0
175

ஜூலை 1ஆம் திகதி முதல் அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைக்க போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஜூலை 1ஆம் திகதி முதல் அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைக்க போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தேசிய கொள்கையின் பிரகாரம், ஜூலை 1ஆம் திகதி பேருந்து கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை, வாகன உதிரி பாகங்களின் விலை, டயர் மற்றும் பேட்டரி விலை உள்ளிட்ட 12 வகைகள் இதில் உள்ளடங்கும் எனவும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த கொவிட் காலத்தில் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லும் சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட 20% பேருந்துக் கட்டண உயர்வுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் குறைக்கப்படாத 10% ஆசனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here