ஊவா மாகாண ஆளுநருக்கும்,கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு!

0
206

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் முஸாமில் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (13) சந்தித்தார்.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு ஊவா மாகாண ஆளுநர் முஸாமில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here