இலங்கை வைத்தியசாலையில் நடக்கும் மோசடியால் அதிகரிக்கும் மரணங்கள்!

0
202

பேராதனை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அதிபர் ஒருவர் தரமற்ற மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

ஹெர்னியா நோய் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதிபருக்கு தரம் குறைந்த மயக்க ஊசி போடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதனை பயன்படுத்த சுகாதார அமைச்சினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார். .

கடந்த ஏப்ரல் மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அதே மயக்க ஊசி போடப்பட்டதாகவும், அந்த ஊசி போட்ட பெண்ணும் உயிரிழந்ததாகவும் மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here