மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அருகில் உட்கார்ந்தார். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸை பரிசாக வழங்கினார்.
நடிகர் விஜய் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
ரசிகர்கள் அன்பில் மிதந்து வந்த விஜய் விழா அரங்கத்துக்கு வந்தார்.
பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அருகில் உட்கார்ந்தார்.
தொடர்ந்து மேடையேறிய விஜய், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கினார்.