சிறுவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இனிப்புகளை சாப்பிட பணத்தை வழங்கி, விகாரை ஒன்றுக்குள் மூன்று சிறுவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை குருநாகல், தெல்விட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
53 வயதான பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பிக்கு தெல்விட்ட பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் விகாராதிபதியாக இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சந்தேக நபர், சில தடைகள் சிறுவர்களுக்கு இனிப்பு வாங்கி சாப்பிட பணத்தை கொடுத்து, விகாரையில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறுவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சிறுவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து தெல்விட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.