ரணிலின் உயிருக்கு ஆபத்து – தீவிர பாதுகாப்பில் கட்டுநாயக்க விமான நிலையம்

0
237

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்காவிலிருந்து நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதி நாட்டிற்கு விஜயம் செய்யும் உயர் அடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் சில வகையான நாசவேலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம், ஸ்னைப்பர் தாக்குதல் அபாயம், பொது மக்களால் குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் உள்ளிட்ட ஆறு விடயங்கள் தொடர்பான அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரமுகர்கள் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவது என்பது தொடர்பில் 08 அம்சங்களின் கீழ் நீண்ட விளக்கத்துடன் அறிவுறுத்தல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இதுபோன்ற தொடர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது என்று பொலிஸ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here