தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் தோனி. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்தாண்டு ஐபிஎல் சீசன் முடிந்த பின்னர் மூட்டு வலிக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.இந்த நிலையில் முழுவதுமாக உடல் நல தேறியுள்ள தோனி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தோனி தனது மகள் ஜிவாவுடன் அவர்கள் வீட்டிலுள்ள நாய்களுடன் விளையாடும் வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் தனது கையில் உள்ள பந்தை தோனி வீசுகிறார். பந்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நாய்கள் துரத்தி சென்று கவ்வி கொண்டு மீண்டும் தோனியிடம் வந்து கொடுக்கிறது.
இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.