அமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளான நபருக்கும், தாக்குதல் நடத்திய நபரின் மனைவிக்கும் இடையில் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பேராதனை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மீது அமில வீச்சு தாக்குதலை நடத்திய ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
அமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளான நபருக்கும், தாக்குதல் நடத்திய நபரின் மனைவிக்கும் இடையில் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கோபத்தில் இருந்து வந்த பெண்ணின் கணவன், இந்த அமில வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலின் போது வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றிருந்த மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.