ஜூலை 3ஆம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சகல சிறுவர்களும் இலவசமாக பார்யிடமுடியும். தெஹிவளை தேசிய மிருகக்சாட்சிசாலையை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விலங்கியல் துறையின் 87ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, ஜூலை 3ஆம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சகல சிறுவர்களும் இலவசமாக பார்வையிடமுடியும்.
மேலும், இந்நாட்களில் விசேட விலங்குகள் விளையாட்டுக்கள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பது குறித்த மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சிறுவர்கள் அறிவைப் பெறுவதற்கான பல வேடிக்கையான திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளமை விசேட அம்சமாகும்.