நுவரெலியா வட்டகொடை யொக்ஸ்போர்ட் பிரிவு திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்றது.
காலை 6.30 மணிக்கு கணபதி பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு யாக பூஜை உட்பட ஏனைய பூஜைகளோடு முத்துமாரி அம்பாளுக்கும், விநாயக பெருமானுக்கும்,முருகபெருமானுக்கும், ஸ்ரீ ஐயப்ப பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
இக்கும்பாபிஷேக பெருவிழாவில் தோட்ட பொதுமக்கள் உட்பட வட்டகொடை பகுதியை சூழவுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதோடு மகேஸ்வர பூஜையுடன் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்