வைத்தியர்கள் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்

0
148

247 சத்திர சிகிச்சை நிபுணர்கள் காணப்பட்ட நிலையில், தற்போது 145 பேர் மட்டுமே காணப்படுவதாகவும் தெரிவித்தார். நாட்டில் தற்போது காணப்படும் வைத்தியர்கள் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் நலிந்த ஜய திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் சுமார் 18 ஆயிரத்து 600 அரச வைத்தியர்கள் காணப்பட்ட நிலையில், அவர்களில் 1500 தொடக்கம் 1700 பேர் கடமையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் 418 இயன் வைத்தியர்கள் காணப்பட வேண்டிய நிலையில் தற்போது 240 பேர் உள்ளனர். எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அவர்களில் 22 பேர் ஓய்வு பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, 247 சத்திர சிகிச்சை நிபுணர்கள் காணப்பட்ட நிலையில், தற்போது 145 பேர் மட்டுமே காணப்படுவதாகவும் தெரிவித்தார். இலங்கையில் உள்ள மயக்க மருந்து நிபுணர்கள் 167 பேர் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் பணிபுரிய சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here