ஜப்பானில் 12.7 சதவீத குடும்பங்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஜப்பானில் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் கீழ் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1986 முதல், ஜப்பானிய அரசாங்கம் தங்கள் நாட்டில் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை பராமரித்து வருகிறது.
அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரத்தை ஜப்பான் சுகாதார மற்றும் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜப்பானில் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 9.9 மில்லியன் (90 லட்சத்து 99 ஆயிரம்). இது 2019 உடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதம் குறைவாகும்.
மேலும், ஜப்பானில் உள்ள 49.2 சதவீத குடும்பங்களில் ஒரே குழந்தையும், 38 சதவீத குடும்பங்களில் இரண்டு குழந்தைகளும், 12.7 சதவீத குடும்பங்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம், 2022 ஆம் ஆண்டில் ஜப்பானில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1899 க்குப் பிறகு முதல் முறையாக வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, நாட்டின் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தை மீட்டெடுக்க பிரதமர் புமியோ கிஷிடோ தலைமையிலான அரசு கடந்த ஜூன் மாதம் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.