பொலிஸ் சார்ஜன்ட் தொடர்ந்தும் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி துப்பாக்கியால் சுட முயற்சித்தார். இரவு தனது பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி துப்பாக்கியால் சுட தயாரானதாகவும் விகாரையில் இருந்த நாய் காரணமாக தான் உயிர் தப்பியதாகவும் மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நான் தற்போது கெவிலியாமடு விகாரையில் இருக்கின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் என்னை சுட்டுக்கொல்வதற்காக வந்தார். இதனால், இரவு நேரங்களில் எனது பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி இரவு 12 மணியளவில் போதி மரத்திற்கு அருகில் உள்ள விளக்கை அணைப்பதற்காக சென்றேன். அப்போது அருகில் குறட்டையிடும் சத்தம் கேட்டது.
ஊர்காவற்படை வீரரும் பொலிஸ் சார்ஜன்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நான் சென்றது பயந்து எழுந்து, சார்ஜன்ட் கைத்துப்பாக்கியை கையில் எடுத்து என்னை சுட முயன்றார்.
நான் ஹாமுதுருவே என்று கூறியதும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டார்.உறக்கத்தில் இருக்கும் போது என்னை எப்படி பாதுகாக்க முடியும் என்று நான் கேட்டேன்.
இதனையடுத்து பொலிஸ் சார்ஜன்ட் தொடர்ந்தும் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி துப்பாக்கியால் சுட முயற்சித்தார்.அப்போது விகாரையில் வளர்க்கப்படும் நாய் வந்து, பொலிஸ் சார்ஜன்ட் மீது பாய்ந்தது, அவர் நாயுடன் போராடிக்கொண்டிருந்த போது, நான் உடனடியாக சென்று விகாரையின் மணியை அடித்தேன். இதன் பின்னர் கிராமவாசிகள் விகாரைக்கு வந்தனர்.
சம்பவம் குறித்து 119 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு பொலிஸாருக்கு அறிவித்தேன் எதுவும் நடக்கவில்லை.
இதனால், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட உயர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அறிவித்தேன். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அதிகாலையில் விகாரைக்கு வந்தார்.
என்னை சுட்டுக்கொல்ல முயற்சித்த பொலிஸ் சார்ஜன்ட் இதற்கு முன்னர் கெவிலியாமடு குளத்திற்கு அருகில் காணி ஒன்றை கைப்பற்றி வேலி அமைத்திருந்தார்.
கிராம மக்கள் அந்த வேலியை கழற்றி அகற்றியதல், இதனால் அவர் என் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.என்னை கைது செய்யுமாறு கோரி அவரது மனைவி போராட்டம் நடத்தினார்.
அரச காணியை அனுபவித்து வருவதால், வரும் வருமானத்தில் பாதியை வறிய மக்களுக்கு வழங்குமாறு கூறியதால், இவர்கள் என் மீது கோபத்தில் இருக்கின்றனர்.என் மீது கோபத்தில் இருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவரை எனது பாதுகாப்புக்கு அனுப்பி வைத்துள்ளமை ஒரு சூழ்ச்சி எனவும் சுமணரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.