முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ன
அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன
முதல் நாள் அகழ்வில் 13 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஆண், பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வு பணி இடம்பெறவுள்ள நிலையில் அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் வருகின்ற வியாழக்கிழமை இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.