ஷோபலா ஜெய்த்மாலா பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான அனிதா என்ற யுவதியும் புர்காரம் என்ற இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் காதலி திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த காதலன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து திருமணமான மூன்றாவது நாளில், தனது காதலன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த புதுமணப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் கோரிமன்னா ஷோபாலா ஜெய்த்மாலா என்ற பிரதேசத்தில் நடந்துள்ளது.
காதலி தற்கொலை செய்து கொள்வதற்கு முன், காதலனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‘வாழ்ந்தாலும் செத்தாலும் ஒருவரையொருவர் சந்திப்போம் என சத்தியம் செய்தோம்… ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள்?’ ‘என்னை ஏன் இந்த துன்ப உலகில் விட்டுச் சென்றாய்? பரவாயில்லை.. இப்போது நானும் உன்னிடம் வருகிறேன். என்றென்றும் நீயே என் உயிர். இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. மன்னிக்கவும் பிரியா’ என எழுதியுள்ளார்.
ஷோபலா ஜெய்த்மாலா பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான அனிதா என்ற யுவதியும் புர்காரம் என்ற இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அனிதாவுக்கு கடந்த 4 ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது. இதனை அறிந்து மனமுடைந்த புர்காரம் அன்றைய தினமே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
காதலன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனிதாவுக்கு கடந்த 5 ஆம் திகதி தெரியவந்துள்ளது.
இதனையடுத்து புதிதாக திருமணமான அனிதா நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள பசுவிடம் பால் கறப்பதற்காக மாட்டு தொழுவதற்கு சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் அனிதா வீடு திரும்பவில்லை என்பதால் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.
அப்போது கிணற்றுக்கு அருகில் பால் குடம் இருப்பதை கண்டு, சந்தேகத்துடன் கிணற்றை பார்த்த போது அனிதாவின் உடல் கிணற்றில் மிதப்பதை கண்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
காதலர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஜெய்த்மலா கிராமத்தில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.