களுத்துறை – கலவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம, பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்று வரும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (07.07.2023) தனது விடுதியிலிருந்து வீட்டுக்குச் சென்றுள்ள குறித்த மாணவி திருமண நிகழ்வொன்றுக்கு செல்ல தாயாரிடம் அனுமதி கோரியுள்ளார்.
இதற்கு தாய் மறுப்பு தெரிவித்து விடுதிக்கு சென்று பாடசாலைக்கு தயாராகும்படி எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இரவு மாணவியை காணாத நிலையில் மாணவியின் வீட்டின் அருகிலுள்ளவர்கள் கழிவறை கதவை உடைத்து பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.