தமிழில் ஒரு கெட்ட வார்த்தை கூட தெரியாது: தமிழ் திரைப்பட விழாவில் ஜாலியாக பேசிய தோனி

0
243

என் வாழ்நாளில் அவர் முதிர்ச்சியாக செயல்பட்டு பார்ப்பேனா என்ற சந்தேகம் உள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எல்ஜிஎம்.

இந்தப் படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தோனி, ”நான் என் மனைவிக்கு எந்த தமிழ் கெட்டவார்த்தையும் இதுவரை சொல்லிக் கொடுத்ததே இல்லை. எனக்கும் எந்த கெட்ட வார்த்தையும் கிடையாது. ஆனால் மற்ற மொழிகளில் கெட்ட வார்த்தை நன்றாக தெரியும்” என்றார்.

”என் வாழ்நாளில் அவர் முதிர்ச்சியாக செயல்பட்டு பார்ப்பேனா என்ற சந்தேகம் உள்ளது. தீபக் சஹருக்கு 50 வயதானாலும் எனது மகள் ஸிவா இப்போது அடைந்துள்ள முதிர்ச்சியை பெறுவாரா என்பதும் சந்தேகமே” என்று கிண்டலாக பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here