இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு?

0
197

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தமது நிறுவனத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தமது கூட்டுத்தாபனம் ஒருபோதும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சந்தைக்கு வெளியிடவில்லை எனவும், எந்தவொரு தரப்பினரும் இதனைச் செய்கின்றார்களா என்பது தெரியவில்லை எனவும் அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர, தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here