நுவரெலியா மாவட்டம் கொட்டகலை நகர் அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி தேவஸ்தான இராஜகோபுர கும்பாபிஷேகம் ஜூலை மாதம் 16ம் திகதி ஸ்ரீ முத்துவிநாயகருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் இடம்பெறவுள்ளது.
இவ் விழாவையொட்டி இம் மாதம் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 15 ம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வும் 16 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் குடமுழுக்கு விழா நடைபெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
கும்பாபிஷேக கிரியைகள் யாவும் தேவஸ்தான பிரதமகுரு ஷாகித்திய சிரோண்மணி.தற்புருஷ சிவாச்சாரியார் பிரதிஷ்டா பிரதமகுரு
சிவஸ்ரீ. ச. ஸ்கந்தராஜ குருக்கள் தலைமையில் ஏனைய சிவாச்சாரியர்கள் நடாத்தி வைப்பார்கள்.
அனைத்து அடியார்களையும் அன்புடன் அழைக்கின்றார்கள்
தேவஸ்தான பரிபாலன சபையினர்
நீலமேகம் பிரசாந்த்