நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த காவல்துறை

0
180

போக்குவரத்து பொலிஸார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் விஜய் அண்மையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

இதற்கிடையே விஜய் நேற்று பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது.

இதனை தொடர்ந்து போக்குவரத்து பொலிஸார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்தநிலையில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here