சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இலங்கை நட்சத்திர வீரர்!

0
163

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர் லஹிரு திரிமான்னே அறிவித்துள்ளார்.

33 வயதான அவர் 2010 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.இதுவரையில், 44 டெஸ்ட் போட்டிகள், 127 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், 2014 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கிண்ண டி20 கிண்ணத்தை வென்ற அணியின் முக்கிய வீரராக லஹிரு திரிமான்னே திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் ஓய்வை அறிவித்துள்ள லஹிரு திரிமான்னே தனக்கு அளித்த அன்பு, ஆதரவுக்காக அனைவரும் அவரது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here