மியன்மாரில் நேற்று(23) இரவு உள்ளூர் நேரப்படி இரவு 10.01 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களையும், அதிகாரிகளையும் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




