இந்த நேர்முகப் பரீட்சை பத்தரமுல்ல இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் மூன்றுக்கு ஆட்சேர்ப்புக்கான பொது நேர்முகப் பரீட்சை இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை மூன்று தினங்கள் கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.
மேற்படி மூன்றாம் தரத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்புக்கான போட்டிப்பரீட்சை 2019 (2020) பிரகாரம் குறிப்பிட்ட பதவிகளுக்கான அடிப்படைத் தகைமைகளைப் பரிசோதிக்கும் பொது நேர்முகப் பரீட்சையே இன்று ஆரம்பமாகின்றது.
இந்த நேர்முகப் பரீட்சை பத்தரமுல்ல இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நேர்முகத் தேர்வின்போது, கோரப்பட்ட ஆவணங்களும் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத்தகுதிகளை நிறைவு செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகள் திறன் மதிப்பீட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி வெளியான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் மற்றும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின்படி அடிப்படைத்தகைமைகள் முறையாக நிரூபிக்கப்படல் வேண்டும்.
பின்னர் சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் கருத்திற் கொள்ளப்படமாட்டாது என நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.