தாமரை கோபுரம் செப்டம்பர் 15, 2022 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. மொத்தம் 22,000 வெளிநாட்டினர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.
கொழும்பு தாமரை கோபுரத்தில் இந்த ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குள் Bungee Jumping ஐ ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி நிறுவனம் இலங்கையில் முதன்முறையாக Bungee Jumping ஐ தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் உலகின் மிக உயரமான Bungee Jumping ஆக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தாகவும், ஆனால் ஸ்கை வளைவில் சில மேம்படுத்தல்கள் செய்யப்பட வேண்டும் என்று நிர்வாகம் கண்டறிந்ததால் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்காக தாமரை கோபுரத்தில் இருந்து முதல் ஸ்கை டைவிங் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், இரண்டு ஸ்கை டைவர்ஸ் கோபுரத்திலிருந்து குதித்ததுடன், அந்த காட்சியை பதிவுசெய்ய அவர்களின் உடலில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தாமரை கோபுரம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதில் இருந்து இன்று மாலை ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாமரை கோபுர நிர்வாகம் வரவேற்றுள்ளது என தாமரைக் கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
தாமரை கோபுரம் செப்டம்பர் 15, 2022 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. மொத்தம் 22,000 வெளிநாட்டினர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.
கோபுரம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட நாள் முதல் வருவாய் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும், தாமரை கோபுரத்தை நிர்வகிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து எதையும் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
“வசூலிக்கப்பட்ட வருவாயில், குத்தகை வாடகையான 100 மில்லியன் ரூபாயை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டிஆர்சி) முதல் வருடத்திற்குள் செலுத்த முடிந்தது,” என்று அவர் கூறினார்.