8 தொழிலாளர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவிசாவளை சீதாவக்க ஏற்றுமதி செயலாக்கக் பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இறப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயினால் தொழிற்சாலைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் தொழிற்சாலையில் பணியாற்றிய 8 தொழிலாளர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.