வாட்ஸ் அப்பில் புதிய வசதி – காணொளி மெசேஜ் அறிமுகம்

0
165

ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நேரத்தை குறைப்பதோடு, எளிதாக புரியக்கூடிய வகையில் இருக்கும்.குறுஞ்செய்திகளை காணொளி பதிவாக பகிர்ந்துக்கொள்ளும் வகையில் ஒரு புதிய வசதியை வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகிறார்கள்.

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி, தமது பயனர்களை கவரும் விதமாக அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது குறுகிய காணொளி குறுங்செய்தியை அனுப்பும் வகையில் ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம், நாம் ஒருவருக்கு வீடியோ மூலம் நமது தகவல்களை எளிதாகப் பகிர்ந்துக்கொள்ளலாம்.இதனை பயன்படுத்தி பயனர்கள் 60 வினாடிகள் வரை பேசி காணொளியாக மற்றவர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான காணொளியாக இல்லாமல் இதனை வேறுப்படுத்திக்காட்ட இந்த காணொளி பதிவு வட்ட வடிவில் பகிரப்படும் வைகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த வசதி ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நேரத்தை குறைப்பதோடு, எளிதாக புரியக்கூடிய வகையில் இருக்கும்.

இந்த புதிய வசதியை விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here