இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியத்தின் 18 வருட முன்னேற்பாட்டு ஆன்மீக எழுச்சி விழா பூண்டுலோயா நகரில் மிகவும் பிரமாண்ட முறையில் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ செல்வராஜ் செல்லதுரை சிவாச்சாரியார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
பூண்டுலோயா நகரில் மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகளுடன் குறித்த பேரணி ஆரம்பமாகி பூண்டுலோயா தமிழ் தேசிய பாடசாலை வரை வருகை தந்து அதனை தொடர்ந்து விழா ஆரம்பமாகியது.
இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியத்தின் ஸ்தாபக செயலாளர் உட்பட குருமார்கள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், பரதநாட்டிய ஆசிரியர்கள், யோகாகலை ஆசிரியர் இலங்கை பிரம்ம குமாரி நிலைய பொறுப்பாளர்கள் ஆலய பரிபாலன சபையினர். உட்பட பலர் இந்நிகழ்வில கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது நடன நாட்டிய கலை கலாசார பஜனை ஆன்மீக கவிதை சிறந்த யோகாகலை கண்காட்சியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியத்தின் குருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்