ட்ரம்ப் குற்றமற்றவர் என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

0
244

இன்று வாஷிங்டன் டி.சி. நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆஜரான போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டடுள்ளது.2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மாற்றி அமைப்பதற்கான தனது முயற்சிகள் தொடர்பான 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்று வாஷிங்டன் டி.சி. நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆஜரான போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டடுள்ளது.

மேலும், அடுத்தகட்ட விசாரணை ஒகஸ்ட் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டார்.

மேலும், டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனின் வெற்றியை காங்கிரஸ் சான்றழிப்பதை தடுக்க முயன்றார் என 45 பக்க குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.

மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். எனவே ட்ரம்புக்கும் அதேமாதிரியிலான தண்டனை கிடைக்கும் என எதி்பார்த்த நிலையிலேயே இவ்வாறு அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவரின் மீது பாலியல் மற்றும் மோசடி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் ட்ரம்ப் நீதிமன்றில் ஆஜராவது முதல் வாதம் நடந்துமுடியும் வரையிலான கற்பனை காட்சிகளும் இணையத்தில் வைரலாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here