நீர் கட்டண அதிகரிப்பின் விளைவு – உணவகங்களில் ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம்!

0
261

ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலையை அரசு உருவாக்கி இருப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
உணவகங்களில் ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலையை அரசு உருவாக்கி இருப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

குடிநீர் கட்டணம் அதிகரித்து வருவதால் உணவகங்களை நடத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் உணவகம் ஒன்றிற்குச் சென்றால் குடிக்கும் நீருக்கும் கட்டணம் அறவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதனால் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவவும், தண்ணீர் குடிக்கவும், கழிவறையை பயன்படுத்தவும், உணவுக்கு தேவையாக பொருட்களை கழுவுதல் மற்றும் சமைப்பது மட்டுமின்றி, ஊழியர்களின் தேவைக்காகவும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் உணவகங்களை பொருத்தவரை, நீரின் தேவையானது இன்றியமையாதது. அந்தவகையில், நீரின்பாவனை குறையுமானால் நோய்களின் தாக்கம் அதிகதமாக வாய்ப்பிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், உணவுப் பொருட்களை கழுவுவதை குறைக்க வேண்டும், வாடிக்கையாளர் பயன்படுத்தும் தண்ணீர் கோப்பைக்கு கூட கட்டணம் வசூலிக்க வேண்டும், உணவகங்களில் உள்ள கழிவறைகளை கூட மூட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் உயவகங்களுக்கு மக்களின் வருகையும் குறைவதோடு உணவக வியாபாரமும் குறைவடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நேற்று முதல் அமுலாகும் வகையில் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுமார் 30 முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படுமெனவும் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்திருந்த நிலையிலேயே இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here