“பைக்கில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள்…தலைக்கவசம் உயிர்க்கவசம்”
“தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்று அஜித்தின் புகைப்படத்தினை பகிர்ந்து பொலிஸ் அதிகாரி ஸ்டாலின் என்பவர் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்புகளுக்கு நடுவில் அடிக்கடி அஜித் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்று வருகின்றார்.
தற்போது மீண்டும் சுற்றுலா பயணத்தினை ஆரம்பித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், அஜித்தின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து பொலிஸ் அதிகாரியான ஸ்டாலின் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அந்த பதிவில், “பைக்கில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள்…தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பைக்கில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள்…
தலைக்கவசம் உயிர்க்கவசம் pic.twitter.com/rb8rykFEQP— Dr. R. Stalin IPS (@stalin_ips) August 2, 2023